Friday, April 11, 2014

TIPS

1)மனிதன் அறிவுக்கு எட்டியவரை கெட்டுப்போகாத ஒரே உணவு தேன் மட்டுமே. எகிப்திய ஃபரோஸ் கல்லறைகளில் கிடைத்த தேனை  சாப்பிட்டு பார்த்து இதை  ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்
2) 1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந்த போது பாதுகாவலளர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்களே தவிர யாரும் காப்பற்றவில்லையாம்.  ஏனெனில் ராணியை அவர்கள் தொடுவது தடுக்கபட்டிருந்ததாம்
3) பண்டைய ரோமர்கள் கி.மு. 25 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்த் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவையின் அடிப்படை ஃபார்முலாதான்  இன்றும் நீருக்கடியில்  பயன்படுத்தப்படும்  கான்கிரீட் கலவை உருவாக்கப்படுகிறது.
4) வேல்ஸ் (இங்கிலாந்து) கடற்கரையில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரே இடத்தில் மூன்று கப்பல்கள்  மூழ்கியுள்ளன. மூன்றும் மூழ்கியது டிசம்பர் 5 தேதிகளில்.  மூன்று விபத்துகளிலும் பிழைத்தவர்கள் ஒவ்வொருவர் மட்டுமே !. அவர்கள் மூவரின் பெயரும் ஹக் வில்லியம்ஸ்
4) ராம் பகதூர் பொம்ஜன், என்கிற ஒரு இளம் புத்த துறவிஒரு மரப்பொந்தில் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் 10 மாதங்கள் தவம் இருந்த்தாக நம்பப்படுகிறது. இந்த நம்பமுடியாத கூற்றை பரிசோதிக்க, டிஸ்கவரி சேனல் நாட்கள் நேரடியாக பகல் மற்றும் இரவு முழுவதும்  படமாக்கப்பட்டது. அதில் அவர் அந்த நான்கு நாட்களில் எவ்வித அசைவும் இன்றியும் வேறு எவ்விதமான தொடர்பும் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. (பார்க்க வீடியோ ஆதாரம்) புத்த ஆதரவாளர்கள் அவரை புத்தர் மறுபிறவிஎன்கிறார்கள் (ஆதாரம்:documentarystrom.com)
5) தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படுதற்க்கு முன்னால் சிகரெட் லைட்டர் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.
6) ஈபிள் கோபுரம் உயரம்  குளிர்காலத்தில் 6 அங்குலங்கள் குறைந்து விடும்.
7) பத்துக்கு ஒன்பது பேர்  மின்சார விளக்கை முதன் முதலில் கண்டுபிடித்தவர்  தாமஸ் எடிசன் என்றுதான் நினைத்துக் கொண்டு்ள்ளனர். ஆனால் முதன் முதலாக மின்விளக்கை கண்டறிந்தவர்  ஜோசப் ஸ்வான் என்ற விஞ்ஞானி ஆவார்.
8) ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர் 1939 – ல் எழுதிய  Gadsby, என்கிற 50.110 சொற்கள் உள்ள அந்த நாவலில்  E என்ற எழுத்தையே பயன்படுத்தவில்லை !
9) தட்டச்சு பலகையில் ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களை கொண்டு அடிக்க கூடிய பெரிய வார்த்தை TYPEWRITER !
10) மனித உடலில் உள்ள செல்களில் மிகப்பெரியது பெண்ணின் கருமுட்டை; மிகச்சிறியது ஆணின் உயிரணு.
11) மனிதனின் மூளை விழித்திருக்கும் நேரத்தைவிட தூங்கும் போது அதிக ஆற்றலுடன் செயல்படுகிறதாம். இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம் 12) மனிதனின் மூளை விழித்திருக்கும் நேரத்தைவிட தூங்கும் போது அதிக ஆற்றலுடன் செயல்படுகிறதாம். இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம் !
13) சிங்கத்தையும் , புலியையும் இணைத்து உருவாக்கப்படும் கலப்பினங்களுக்கு (tigons and ligers) டைகன்ஸ் மற்றும் லைகர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
14) கான்வெண்ட் என்பது கன்னியாஸ்திரீகள் வசிக்கும் இடம்
15) பாலிலிருந்து தயாரிக்கும் நெய்க்கு பகரமாக தாவர எண்ணெயிலிருந்து தாயாரிக்கப்பட்டதுதான வனஸ்பதிஎனப்படும் விஜிடபிள் நெய்.  இதை தயாரித்த பிரபல கம்பெனியின் பெயர்தான் டால்டா’. ஆனால் அப்பெயரே வன்ஸ்பதி எண்ணெய்க்கு பெயராக மாறிவிட்டது !?

16) o.c.s.

 இலவசமாக எதையேனும் பெறுவதை  என்ன ஓசி யா என்று கேலியாக கேட்பது வழக்கம். இது தமிழகத்தை தவிர்த்து வேறெங்கும் உபயோகிப்பதாக தெரியவில்லை !
இச்சொல் எப்படி நடைமுறைக்கு வந்தது ? என்பது சுவாரசியமான விஷயம்.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்களின் அரசுத்துறையை O.C.S. (The UK’s Office for Civil Societ y, part of the government’s Cabinet Office ) என்று குறிப்பிடுவார்கள். எனவே அரசாங்கம் தொடர்பான தபால்களில் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல்  on O.C.S. service  (இதையே On Company Service என்றும் கூறுவதுண்டு.) என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்கும். அப்படி வரும் தபால்களை தபால் இலாகா ஊழியர்கள்  o c s  என்று குறிப்பிடுவார்கள் அது காலப்போக்கில் மருவி  OC ஆகிவிட்டிருந்தது. அதே சொல் தபால் துறையை தாண்டி பொது வழக்கத்திலும் பயண்படுத்தபட்டு இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்களில் ஒன்றாக மாறிவிட்டது

17) இரவில் விழித்திருப்பதற்கும், சுறுசுறுப்புக்கும் நாம் காப்பி  சாப்பிடுவது வழக்கம். காப்பியில் உள்ள காஃபினே அந்த சுறுசுறுப்படைய வைக்கிறது. ஆனால்   ஒரு ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரையில் ஒரு கப் காபியில் உள்ள காஃபினை விட அதிகமாக உள்ளது. எனவே, இனி பரிட்சைக்கு படிக்கும் போது காப்பிக்கு பதிலாக ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.
18) கம்பளி பூச்சிக்கு மனிதனுக்கு உள்ள தசைகளை விட அதிக தசைகள் உள்ளன
19) ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் டூத் பேஸ்ட்டை விற்க அந்த கம்பெனிகாரர்கள் பெரும் பாடுபட்டார்களாம் !? ஏன் தெரியுமா ? ’கோல்கேட்என்ற சொல்லுக்கு தற்கொலை செய்து கொள்என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தமாம்.
20) அறிவாளிகளின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு (zinc and copper) சதவீதம் மற்றவர்களைவிட அதிகமாக இருக்குமாம் !?
21) பறவைகளில் நீந்தக்கூடிய ஆனால் பறக்க இயலாத ஒரே பறவை பெங்குவின். அதேபோல் நிமிந்து நடக்ககூடிய ஒரே பறவையும் பெங்குவின்தான்.
22) பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே  கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்.
23) கூகுல் ( Google) என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட  எண்களுக்கான  பொதுவான பெயர் ஆகும்
24) மனித உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி கண் விழிகளின் வெண்படலம். அதற்கு தேவையான பிராணவாயுவை அது காற்றிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கிறது
  • 25) தேன் மிக எளிதாக ஜீரனிக்க காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுள்ளது.
26) சேவல்களால் அதண் கழுத்தை உயர்த்தாமல் கூவ முடியாது
27) நாம் தும்மும் ஒவ்வொரு  தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றன

28)                               24 மணி நேரத்தில்  சராசரி மனிதனின்:

நகங்கள் 0,00007 அங்குலம் வளர்கின்றன

  முடி 0,01715 அங்குலம் வளருகிறது

29) ஒரு மில்லியன்  ஃபிக்ஸில்கள்  ஒரு மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கப்படுகிறது.  உதாரணத்திற்கு 3.1 மெகா ஃபிக்ஸில் கேமராவில்  2048 x 1536 புள்ளிகள் கொண்ட போட்டோவை எடுக்கலாம். அதன் மொத்த புள்ளிகள் 3,145,728 ஃபிக்ஸில் ஆகும். இந்த அளவே 3.1 மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கபடுகிறது


30) ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர் 1939 – ல் எழுதிய  Gadsby, என்கிற 50.110 சொற்கள் உள்ள அந்த நாவலில்  E என்ற எழுத்தையே பயன்படுத்தவில்லை

No comments: