Saturday, June 14, 2014

கன்ஃபூஷியஸ் சிந்தனைகள்.

1.   நல்ல பண்புகள்.
·         நல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.
·         நல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.
·         நீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.உயர்ந்த குணங்களைப் பின்பற்றவேண்டும்.கலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
·         நல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும்.மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.
1.   நல்லவர்கள் எப்படி இருப்பார்கள்
·         அவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார்.சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.
·         ஆர்வத்துடன் உழைப்பார்கள்.
·         சோம்பலாக இருக்கமாட்டார்கள்.
·         பெரியவர்களை மதித்து நடப்பார்கள்.
·         புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.
·         அன்போடு பழகுவார்கள்.
·         நிலைமாறாமல் இருப்பார்கள்.
·         தங்களைப்பர்றிப் பெருமையடிக்க மாட்டார்கள்.
·         ஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.
·         அனைவரையும் அரவணைப்பார்கள்.
·         எல்லோரிடமும் சமமாகப் பழகுவர்.
·         தர்மத்தின் பாதையில் நடப்பார்கள்.
·         சட்டத்தை மதிக்கிறார்கள்.
·         சுதந்திரமாக வாழ்வார்கள்.
·         பொறாமைப்பட மாட்டார்கள்.
1.   நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள்
·         பணிவன்பு
·         சகித்துக்கொள்ளும் தன்மை
·         சக மனிதர்கள் மீது நம்பிக்கை
·         விடாமுயற்சி
·         கருணை
1.   மென்மையான குணங்கள் எவை?
·         மனஉறுதி
·         விடாமுயற்சி
·         மென்மையாகப் பேசுவது
1.   கெட்ட குணங்கள்
·         பாசாங்கு செய்தல்
·         கோபப்படுவார்கள்.
·         சண்டை செய்வார்கள்.
·         வதந்திகளை பரப்புவார்கள்.
1.   படிப்பு
·         சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்
·         படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்
·         உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.
·         நல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.
·         ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.
1.   தலைவர்
·         பதவிக்கு மரியாதை கொடுப்பார்.
·         நம்பிக்கைக்குரியவர்.
·         உயிரைத் துச்சமாக மதிப்பர்.
·         நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.
·         நல்ல விஷயங்களை பின்பற்றுவார்கள்.
·         அமைதியாக இருப்பார்கள்.
1.   கடவுள்,கோயில்,சடங்குகள்
·         கடவுளை கும்பிடும் போது அடக்கம் வேண்டும்.
·         பெற்றோரின் தேவையறிந்து உதவிகள் செய்தல்.
1.   வெறும் சில
·         கெட்டதை எண்ணாதே
·         நேர்மையின் வழியில் நட
·         தன்னடக்கத்துடன் இரு
·         மனஉறுதியுடன் இரு
·         கண்ட நேரத்தில் சாப்பிடாதே
·         வயிறு நிறையச் சாப்பிடாதே.
·         மற்றவர்களின் பொருள்மீது ஆசைபடாதே
·         எளிமையாக இரு

·         தவறு செய்தவர்களை மன்னித்திடு

No comments: