Tuesday, December 2, 2014

கலிலீயோ மீண்டும் கௌரவிக்கப்பட்டார்


                                                   
கலிலீயோ மீண்டும் கௌரவிக்கப்பட்டார்
 “நவீன அறிவியலின் தந்தை என கலிலீயோ பலராலும்போற்றப்படுகிறார். அவர் ஒரு கணித மேதை, வானவியல் விஞ்ஞானி,இயற்பியல் அறிஞர். டெலஸ்கோப்பின் உதவியுடன் வானை ஆராய்ந்தஆரம்ப கால ஆராய்ச்சியாளர்களுள் கலிலீயோவும் ஒருவர். அன்றுஎங்கும் காரசாரமாக விமர்சிக்கப்பட்டு வந்த ஒரு கருத்தை ஆதரிக்கடெலஸ்கோப்பின் உதவியுடன் தான் பார்த்தவற்றை விலாவாரியாகஅவர் விளக்கினார். சூரியனை சுற்றி பூமி வலம் வருகிறது, ஆகையால்பிரபஞ்சத்தின் மையத்தில் நம் கிரகமான பூமி இல்லை என அவர்விளக்கினார். எனவே நவீன ஆய்வாராய்ச்சி முறைக்கு வித்திட்டவராககலிலீயோ சிலசமயங்களில் கருதப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை!
கலிலீயோ எதையெல்லாம் கண்டுபிடித்தார், உருவாக்கினார் எனதெரியுமா? வியாழன் கிரகத்திற்கு நிலாக்கள் உள்ளன, பால்வீதிமண்டலத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் உள்ளன, சந்திரனில் மலைகள்உள்ளன, வெள்ளி கிரகத்தில் சந்திரனைப் போலவே வெவ்வேறுபிறைகள் ஏற்படுகின்றன. இவை, வானவியல் விஞ்ஞானியாகஅவருடைய கண்டுபிடிப்புகளில் சில. இயற்பியல் அறிஞராக அவர்ஊசற்குண்டையும் (pendulum) கீழே விழும் பொருட்களின் வேகத்தையும்கட்டுப்படுத்தும் இயற்பியல் சட்டங்களை ஆராய்ந்தார். வடிவியல்காம்பஸையும், நழுவும் சட்டம் (slide rule) போன்ற ஒரு கருவியையும்அவர் உருவாக்கினார். ஹாலந்திலிருந்து பெற்ற தகவலைப்பயன்படுத்தி பிரபஞ்சத்தையே தன் கண் முன் கொண்டு வந்துநிறுத்திய டெலஸ்கோப்பை படைத்தார்.
எனினும், மத குருவர்க்கத்தாருடனான நீண்ட கால மோதல் இந்தப்பிரபல விஞ்ஞானியின் பணிக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியது;அதுவே கலிலீயோவின் வழக்கிற்கு வித்திட்டது. அது எப்படிஆரம்பமானது, ஏன்?
ரோமுடன் கருத்து பேதம்

16-ம் நூற்றாண்டின் முடிவிலேயே கோப்பர்னிக்கஸின் கோட்பாட்டைகலிலீயோ ஏற்றுக்கொண்டார். சூரியன் பூமியைச் சுற்றி வலம்வரவில்லை, பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்பதே அந்தக்கோட்பாடு. இது ஹெலியோசென்ட்ரிக் (சூரியனை மையமாக கொண்ட)அமைப்புமுறை எனவும் அழைக்கப்படுகிறது. வான வீதியில் வலம்வருகிற, இதுவரை அறியப்படாத நட்சத்திரங்களையும் கிரகங்களையும்கண்டுபிடிக்க கலிலீயோ 1610-ல் தன் டெலஸ்கோப்பைப்பயன்படுத்தினார்; பிறகு ஹெலியோசென்ட்ரிக் அமைப்புமுறைக்கானஆதாரத்தைக் கண்டுபிடித்ததில் அவர் பரமதிருப்தியடைந்தார்.
இப்படி அரும்பெரும் உண்மைகளை கண்டுபிடித்ததுடன் கலிலீயோதிருப்தியடையாமல் இன்னும் முன்னேற விரும்பினார் என்கிறதுகிராண்டி டீட்சியானாரியோ என்சீக்லோபிடீகோ UTET என்ற புத்தகம்.கோப்பர்னிக்கஸின் கோட்பாடு சரியானதே என்பதை அன்றையநாளின் உயர் பதவியிலிருந்த பிரமுகர்களுக்கு (பிரபுக்களுக்கும்கார்டினல்களுக்கும்)” அவர் உணர்த்த விரும்பினார். செல்வாக்குமிக்கநண்பர்களின் உதவியோடு சர்ச்சின் எதிர்ப்புகளை சமாளித்து, அதன்ஆதரவை எப்படியாவது பெற்றுவிடலாம் என மனக்கோட்டையும்கட்டினார்.
1611-ல் கலிலீயோ ரோமிற்குப் பயணப்பட்டார். பொறுப்பானபதவிகளிலிருந்த குருமார்களைக் கண்டார். தன் அரிய வானவியல்கண்டுபிடிப்புகளை காட்ட தன் டெலஸ்கோப்பைப் பயன்படுத்தினார்.ஆனால் அவர் ஆசைப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை. 1616-ல்அதிகாரிகளால் கலிலீயோ தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.
ஹெலியோசென்ட்ரிக் அமைப்புமுறை பற்றிய ஆய்வுக் கோட்பாடு,“அநேக இடங்களில் பரிசுத்த வேதாகமத்திலுள்ள வாக்கியங்களின்நேர்ப்பொருளுடனும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவிளக்கவுரையுடனும், பரிசுத்த போப்புகள் மற்றும் தலைசிறந்தஇறையியலாளர்களின் புரிந்துகொள்ளுதலுடனும் பகிரங்கமாகவேமுன்னுக்குப் பின் முரண்படுகிறது; எனவே அந்தத் தத்துவம்முட்டாள்தனமானது, அர்த்தமற்றது, விதிப்படி முரண்பாடானது எனரோம ஒடுக்குமுறை விசாரணை மன்ற இறையியலாளர்கள் முத்திரைகுத்தினார்கள்.
ராபர்ட் பெல்லார்மீன் என்ற கார்டினலை கலிலீயோ சந்தித்தார்;அன்று அவர் கத்தோலிக்க இறையியலாளர்களில்முதன்மையானவராக கருதப்பட்டவர், முரண் சமயகோட்பாட்டாளர்களை உடைத்தெறியும் சுத்தியல் என சிறப்பு பெயர்பெற்றவர். சூரியனை மையமாக கொண்ட அமைப்புமுறை பற்றிய தன்கருத்துக்களை கலிலீயோ பரப்பாதிருக்கும்படி வெகு கண்டிப்புடன்அவர் சொல்லியிருந்தார்.
ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தில்
கலிலீயோ ரொம்பவே முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளமுயன்றார்; ஆனால் கோப்பர்னிக்கஸின் ஆய்வுக் கருத்துக்களை அவர்தொடர்ந்து ஆதரித்து வந்தார். பதினேழு வருடங்களுக்குப் பிறகு 1633-ல் ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தில் ஆஜரானார் கலிலீயோ.அதற்குள் கார்டினல் பெல்லார்மீன் இறந்திருந்தார், ஆனால்ஒருகாலத்தில் கலிலீயோவிற்கு சாதகமாக இருந்த எட்டாம் போப்அர்பன் என்பவர் அவருக்கு முக்கிய எதிரியாக முளைத்தார். அன்றுநடந்த விசாரணைகளிலேயே இது, மிகப் பிரபலமானது, துளியும்நியாயமற்றது என எழுத்தாளர்கள் விமர்சித்தார்கள்; இதை சாக்ரடீஸ்,இயேசு ஆகியோரின் விசாரணைகளுக்கு சமமாக கருதினார்கள்என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இந்த விசாரணைக்குக் காரணம்? உலகின் முக்கியமான இரு ஒழுங்கு முறைகளின் உரையாடல் என்ற புத்தகத்தை இத்தாலிய மொழியில்கலிலீயோ எழுதினார். பூமி சூரியனைச் சுற்றி வருவதை இப்புத்தகம்ஆதரித்தது. 1632-ம் ஆண்டு விசாரணை மன்றத்தில் ஆஜராகும்படிஇந்த புத்தகத்தை எழுதிய கலிலீயோவிடம் சொல்லப்பட்டது. ஆனால்சுமார் 70 வயதானவராகவும் வியாதிப்பட்டவராகவும் இருந்ததால் அவர்அங்கு செல்வது தாமதமானது. சிறையிலடைக்கப்படுவார்,பலவந்தமாக இழுத்து வரப்படுவார் என்றெல்லாம் மிரட்டப்பட்டதால்மறுவருடமே ரோமுக்கு புறப்பட்டார். அங்கு போப்பின் ஆணைப்படிவிசாரணை செய்யப்பட்டார், துன்புறுத்தப்படுவார் என்றும்பயமுறுத்தப்பட்டார்.
வியாதிப்பட்ட இந்த முதியவர் உண்மையில் துன்புறுத்தப்பட்டாராஇல்லையா என்பது சர்சைக்குரிய விஷயம். அவருக்கு வழங்கப்பட்டகுற்றத்தீர்ப்பின்படி, கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.துன்புறுத்துதலை விவரிக்க சட்ட ரீதியாக அன்றுஉபயோகிக்கப்பட்டவையே இவ்வார்த்தைகள் என இத்தாலியசட்டத்தில் கரைகண்ட, ஈடாலோ மெரேயூ என்ற சரித்திராசிரியர்சொல்கிறார். அந்த விளக்கத்தை அநேக கல்விமான்கள்ஆமோதிக்கிறார்கள்.
அவர் துன்புறுத்தப்பட்டாரோ இல்லையோ ஆனால் 1633, ஜூன் 22-ம்தேதி ஒரு சாதாரண அறையில், ஒடுக்குமுறை விசாரணைமன்றத்தாரின் முன்னிலையில் அவருக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.பரிசுத்த தெய்வீக வேதாகமம் கற்பிக்காத பொய் போதகங்களை,அதாவது சூரியன் . . . கிழக்கிலிருந்து மேற்கே நகருவதில்லை,பூமிதான் அதைச் சுற்றி வருகிறது, பூமி அண்டத்தின் மையத்தில்இல்லை என்றெல்லாம் நம்பினார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கலிலீயோ உயிர் தியாகியாக இறக்க விரும்பவில்லை; எனவேதவறான கருத்துக்களேயே தான் நம்பியதாக தன் வாயாலேயேசொல்லும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்டதீர்ப்பு வாசிக்கப்பட்ட பிறகு, செய்த தவறுக்காக வருந்துகிறவர் போல்உடை அணிந்து, இந்த வயதான அறிவியலாளர் முழங்காலில்நின்றுகொண்டு இவ்வாறு சொன்னார்: முன்பு சொன்ன தவறானகூற்றுகளையும் [கோப்பர்னிக்கஸ் கோட்பாட்டு] முரண்பாடுகளையும்இன்னும் பிற தவறுகளையும் அத்தோடு புனித சர்ச்சுக்கு எதிரானஎல்லா தவற்றையும், முரண்பாட்டையும், பிரிவினையையும் நான்மறுக்கிறேன், சபிக்கிறேன், வெறுக்கிறேன்.
இவ்வாறு சொல்லிவிட்டு, நிலத்தை காலால் ஓங்கி ஒரு மிதிமிதித்து எனினும் இது சுற்றி வருகிறது! என அவர் எதிர்த்ததாக ஒருகதையும் உள்ளது; ஆனால் அது போதிய ஆதாரமற்றது. தன்கண்டுபிடிப்புகளையே பொய்யென சொன்னதால் ஏற்பட்ட அவமானம்அந்த அறிவியலாளர் இறக்கும் வரை அவரை வாட்டி வதைத்ததாககருத்துரையாளர்கள் சொல்கிறார்கள். அவருக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை, நிரந்தரமான வீட்டுக் காவல் தண்டனையாகமாற்றப்பட்டது. அவர் மெல்ல மெல்ல கண்ணொளியை இழக்கஆரம்பித்ததால் தனிமையிலேயே வாழ்நாளைக் கழித்தார் என்றேசொல்லலாம்.
கலிலீயோ மீண்டும் கௌரவிக்கப்பட்டார்


இரண்டாம் ஜான் பால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடுத்தவருடமாகிய, 1979, நவம்பர் மாதம், கலிலீயோவின் நிலையை அவர்பரிசீலிக்க விரும்பினார். மனிதர்களின் கைகளிலும் சர்ச்அமைப்புகளின் கைகளிலும் . . . அவர் பெரும் கஷ்டத்தைஅனுபவித்ததை அந்தப் போப் ஒப்புக்கொண்டார். பதின்மூன்றுவருடங்களுக்குப் பிறகு 1992-ல் அதே போப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கமிஷன், கலிலீயோவின் காலத்தில் வாழ்ந்த சிலஇறையியலாளர்கள் . . . படைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் அமைப்பைக்குறித்த பைபிள் விவரிப்புகளின் ஆழமான, அடையாள அர்த்தத்தைப்புரிந்துகொள்ள தவறினார்கள் என ஒப்புக்கொண்டது.
எனினும் சூரியன் மையத்திலிருப்பதைப் பற்றிய கோட்பாட்டைஉண்மையில் இறையியலாளர்கள் மட்டுமே குறைகூறவில்லை. அந்தவழக்கின் முக்கிய நபரான போப் எட்டாம் அர்பன், பிரபஞ்சத்தின்மையத்தில் பூமி உள்ளது என்ற ஆண்டாண்டு கால சர்ச் போதனையைகலிலீயோ ஆட்டம் காண செய்துவிடக் கூடாதென்று சொல்லிஅவரைக் கடுமையாய் எதிர்த்தார். அந்தச் சர்ச் போதனை பைபிளில்உள்ளதல்ல, அது கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் கற்பித்ததே.
இந்நாளைய கமிஷன் அந்த வழக்கை அயராது பரிசீலித்தது; பிறகு,கலிலீயோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அவசரப்பட்டுஎடுக்கப்பட்ட தவறான தீர்ப்பு என போப் அழைத்தார். 


No comments: